திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் ஜோடிக்கு சவுக்கடி தண்டனை; நடுரோட்டில் கதறிய இளம்பெண்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள உத்தர் தினாஜிபூர் மாவட்டம், சோப்ரா பகுதியில் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இதில், பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் நாளடைவில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சவுக்கடி கொடுக்க தீர்ப்பு
இதனிடையே, இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டு இருக்கிறார். அங்கு விசாரணை நடத்தப்பட்டு, கள்ளக்காதல் ஜோடிக்கு பொதுவெளியில் சவுக்கடிகள் கொடுக்க முடிவெடுக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவி.. மனம்மாறிய கணவருக்கு ஆப்பு வைத்த கேடி மனைவி.!
Woman beaten like an animal on the streets of Bengal
— Organiser Weekly (@eOrganiser) July 1, 2024
Where is Mamata Banerjee? pic.twitter.com/3SZQ8t0hwm
வீடியோ வெளியாகி சர்ச்சை
அதன்படி, கள்ளக்காதல் ஜோடியை பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டது. இந்த விஷயம் கடந்த ஜூன் 28 அன்று நடைபெற்ற நிலையில், வீடியோ வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் காவல் துறையினர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. காவல்துறையினர் சாட்டையடி தண்டனை வழங்கிய நபரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த மகளை சீரழித்த தந்தை; வீடியோவை வெளியிட்டு நியாயம் கேட்ட மகள்.. பதறவைக்கும் சம்பவம்.!