96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நேரலையில் தலைமுடியை வெட்டி வீசிய India Today பெண் செய்தியாளர் கீதா மோகன்; காரணம் தெரியுமா?..!
India Today செய்தி வாசிப்பாளர் நேரலையில் போதே தனது தலைமுடியை வெட்டி வீசியெறிந்தார்.
ஈரான் நாட்டை சேர்ந்த 22 வயது பெண்மணியான மாஷா அமினி, ஹிஜாப் அணிய மறுத்த குற்றத்திற்காக காவலர்களால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த தகவல் அந்நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அமினியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, அந்நாட்டு மக்களால் கடந்த செப். 17ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்று வரை நடந்து வருகிறது. இதற்கிடையில், உலகளவில் அமினிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒவ்வொருவரும் தங்களின் தலைமுடியை வெட்டிக்கொண்டனர்.
இந்த நிலையில், India Today செய்தி நிறுவனத்தின் பெண் செய்தி வாசிப்பாளர் கீதா மோகன், உலக செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கும்போதே தனது தலைமுடியை வெட்டி வீசி மாஷா அமினிக்கு ஆதரவு தெரிவித்தார்.