பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட 7 இந்திய மீனவர்கள் மீட்பு; 2 மணிநேரம் சேசிங்., இந்திய கடற்படை கப்பல் அக்ரிம் அதிரடி.! 



Indian Coast Guard ship Agrim Rescued 7 Indian Fisherman Trapped by PAK Coastal Guard 

 

இந்திய மீனவர்கள் 7 பேர், நேற்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம், அங்கு பாகிஸ்தான் கடற்படை கப்பல் வந்த நிலையில், இந்திய மீனவர்களை அவர்கள் சிறைபிடித்து இருக்கின்றனர். மேலும், தங்களின் நாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். 

பாக். கடற்படையை நேரடியாக எதிர்த்து மீட்பு

தாங்கள் பாகிஸ்தான் நாட்டின் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தகவலை தெரிவித்த நிலையில், இந்திய கடலோர காவல்படை கப்பல் அக்ரிம் சுமார் 2 மணிநேரம் துரத்திச் சென்று, பாகிஸ்தான் கப்பலை இடைமறித்து இந்திய மீனவர்களை மீட்டு இருக்கிறது. 

இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்த காருக்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதிப்பு; வீடியோ வெளியானதால் காவல்துறை அதிரடி.!

பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (பிஎம்எஸ்ஏ) கப்பல் மூலமாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, கடற்படை களமிறங்கி வெற்றிகரமாக மீட்டுள்ளது. பாகிஸ்தான் கப்பலை இடைமறித்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், மீனவர்கள் மீட்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; நினைவிருக்கா மக்களே?