3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அடுத்தடுத்த ஆக்சன் பிளாக்.. ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. இந்திய இராணுவம் அதிரடி.!
நேற்று இரவு முதல் இன்று காலை வரை ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம், நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மாலை தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3 பயங்கரவாதிகள் வீட்டிற்குள் பதுங்கியிருந்த நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்கு பின்னர் 3 பயங்கரவாதிகளும் அதிரடியாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். எதிரிகள் தாக்குதலில் 1 காவலர் காயம் அடைந்தார்.
3 பயங்கரவாதிகளால் 2 பேர் காஷ்மீரை சார்ந்த பயங்கரவாதிகள் என்பதும், ஒருவர் பாகிஸ்தான் நாட்டினை சார்ந்த பயங்கரவாதி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதற்குள்ளாக, குல்காம் மாவட்டம் மிர்கமா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட, அங்கும் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே சண்டை நடந்தது. இந்த நடவடிக்கையில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். நேற்று ஒரேநாளில் 6 பயங்கரவாதிகள் அடுத்தடுத்து பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுளள்னர்.
இவர்கள் 6 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.