96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரேக்கப் சொன்ன காதலி.. மலை உச்சியில் இறுதி சந்திப்பு.. துடிக்க துடிக்க அரங்கேறிய சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் பகுதியில் அமைந்திருக்கும் கவலாகெரே கிராமத்தில் சுசித்ரா எனும் 20 வயது இளம் பெண் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் பொறியியல் கல்லூரி படித்து வந்த அவர் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் தேஜஸ் (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தேஜஸ் படித்துவிட்டு தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக எரிச்சல் அடைந்த சுசித்ரா காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இது தேஜஸ்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இருவரும் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தேஜஸ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும் என்று சுசித்ராவை தேஜஸ் அழைத்துள்ளார். எனவே, மறுக்காமல் சுசித்ராவும் தேஜஸ் சொன்ன குந்திகுட்டா மலைப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது காதலியை சமாதானப்படுத்த தேஜஸ் முயற்சித்துள்ளார். ஆனால், சுசித்ரா மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தேஜஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுசித்ராவை கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்த சுசித்ராவை அங்கேயே போட்டுவிட்டு தேஜஸ் தப்பியோடியுள்ளார்.
அதே இடத்தில் பிணமாக கிடந்த சுசித்ராவின் உடலை அப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார் சுசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது காதலன் தேஜசையும் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.