96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சொத்து தகராறில் அண்ணி, 2 பச்சிளம் குழந்தைகள் கொடூர கொலை; ஈவுஇரக்கமின்றி நடந்த பயங்கரம்.!
அண்ணன் - தம்பிகளுக்கு இடையேயான சொத்து தகராறில், அண்ணனின் மனைவி மற்றும் அவரின் பச்சிளம் குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொலை செய்யப்பட்ட சோகம் பதறவைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி மாவட்டத்தில் வசித்து வருபவர் குமார் கவுடா. இவரின் மூத்த சகோதரர் ஹென்னெ கவுடா.
ஹென்னெ கவுடாவின் மனைவி கீதா மாரி (வயது 32). தம்பதிகளுக்கு அகுல் என்ற 10 வயது மகனும், அங்கிதா என்ற 8 வயது மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், சகோதரர்களான குமார் - ஹென்னெ இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்து ஹென்னெ வெளியே சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த கீதா மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் குமார் கவுடாவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.