குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காலை நீண்ட நேரமாகியும் பூட்டிக்கிடந்த வீடு!! உள்ளே எட்டிப்பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நாகேந்திர கடா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லப்பா கடாதா (30). இவரது மனைவி சுதா (24). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகும்நிலையில், 3 மாதங்களே ஆன ரூபாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மல்லப்பாவின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்பட்டதாதல், அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே எட்டி பார்த்தபோது சுதா, குழந்தை இருவரும் ஒரு அறையில் சடலமாகவும், மல்லப்பா மற்றொரு அறையில் சடலமாகவும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து மூவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவந்ததாகவும், இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அல்லது குழந்தையை கொன்றுவிட்டு சுதா தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதனால் மல்லப்பாவும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.