96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வடமாநில கும்பல் கைவரிசை?.. நள்ளிரவில் தாக்குதல், நகை-பணம் கொள்ளை.. குடும்பத்தினர் 5 பேர் படுகொலை..!
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பெண் - சிறார்கள் என இரக்கமின்றி 5 பேரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டனா - கே.ஆர்.எஸ் கிராமம் பஜார் லைன் தெருவில் வசித்து வருபவர் கங்காராம். இவரின் அண்ணன் கணேஷ். அண்ணன் - தம்பி இருவரும் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். பிற மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். கங்காராமின் மனைவி லட்சுமி (வயது 32). இவர்கள் இருவருக்கும் ராஜ் என்ற 12 வயது மகனும், கோமல் என்ற 7 வயது மகனும், குணால் என்ற 5 வயது மகனும் உள்ளனர். இவர்களோடு கணேஷின் மகன் கோவிந்தும் (வயது 12) வசித்து வந்துள்ளார்.
தொழில் தொடர்பாக அண்ணன் - தம்பி இருவரும் வெளியூர் சென்றுவிட்டால், மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார்கள். கடந்த 2 ன்ட்களுக்கு முன்னதாக இருவரும் வெளியூர் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் லட்சுமி தனது குழந்தைகள் மற்றும் கணேசின் மகனுடன் தனியே இருந்துள்ளார். நேற்று முன்தினத்தில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்ற நிலையில், நள்ளிரவில் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே வந்துள்ளனர்.
பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் வந்த கும்பல், வீட்டில் இருந்த 5 பேரின் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. பெண், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி நடந்த தாக்குதலில் லட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 சிறார்களும் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையை அரங்கேற்றிய கும்பல் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை, விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.
நேற்று காலை நேரத்தில் கங்காரமின் வீடு திறந்து இருந்த நிலையில், வீட்டில் இருந்த அனைவரும் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கே.ஆர்.எஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்த தடயங்களையும் சேகரித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என காவல் துறையினர் தெரிவித்தனர். நள்ளிரவில் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.