நீண்ட நேரமாகியும் திறக்காத கடை... உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள் பேரதிர்ச்சி.!



karnataka men suicide in bike garriage

திருமணம் செய்து கொள்ள மணப்பெண் கிடைக்காததால் ஒரு இளைஞர் தனது பைக் கேரேஜில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கழுத்தை நெரித்த கடன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுக்கேரியைச் சேர்ந்த சாந்திநாத் எனும் 27 வயது இளைஞர் அதே நகரில் சொந்தமாக ஒரு பைக் கேரேஜ் நடத்தி வந்துள்ளார். தனது தொழிலை இவர் நடத்துவதற்காக அதிகப்படியாக நபர்களிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். இந்த கடனை கட்ட முடியாமல் சாந்தி நாத் அவதிப்பட்டு வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நிறைய இடங்களில் பெண் தேடி உள்ளார். 

இதையும் படிங்க: "எவன் கூட வீடியோ கால் பேசுற." மனைவியை கொன்று, பிணத்தை என்ன செய்தார் தெரியுமா.?! 

ஊழியர்கள் சந்தேகம்

இவரது கடன் பிரச்சனையை கருத்தில் கொண்டு பலரும் இவருக்கு பெண் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இன்று காலையில் வழக்கம் போல கேரேஜூக்கு வந்த ஊழியர்கள் அது திறக்கப்படாமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

தூக்கில் தொங்கிய சாந்திநாத்

அங்கே சாந்திநாத் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார். இதை பார்த்தவுடன் அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து இது பற்றி கேரேஜ் ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் சமீப காலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கொடுமையானதாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கியாஸ் கசிந்து சோகம்; உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர், 2 மகள்கள் என குடும்பமே பலி.!