குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கொடூரத்தின் உச்சம்.. கை-கால்களை கட்டிப்போட்டு, கற்பழிப்பு, போலித்திருமணம்..! எஸ்கேப்பான விவசாயி.!
இளம்பெண்ணுக்கு திருமண வரன் பார்த்து தருவதாக கூறி ஏமாற்றி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன், திருமணம் செய்து கைவிட்டு தலைமறைவான கொடூரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகால் டவுனில் இளம்பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கொள்ளேகால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "கொள்ளேகால் அகனஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் துரைசாமி (வயது 32). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். துரைசாமி எனது பெற்றோருக்கு பரிட்சயமானவர்.
இவர், எனது பெற்றோர்களிடம் எனக்கு நல்ல வரன் தேடி கொடுப்பதாக கூறி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர ஒன்று இருக்கிறது என்று கூறிய துரைசாமி, அவரின் வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார். அவரது வீட்டில் வைத்து எனக்கு குளிர்பானம் தந்த நிலையில், அதனை நான் குடிக்காமல் இருந்தேன். பின்னர், எனது கை-கால்களை கட்டி வாயில் துணியை வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை வெளியே கூறினால் என்னை குடுமபத்துடன் கொலை செய்வதாகவும் மிரட்டினார். இதனால் நான் பயத்தில் பிறரிடமும் எனக்கு நடந்த கொடூரத்தை தெரிவிக்காமல் இருந்தேன். இதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட துரைசாமி, என்னை மிரட்டி மேலும் பலமுறை பாலியல் வல்லுறவு மேற்கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக ஒருகட்டத்தில் பெற்றோருக்கு நான் தெரிவித்துவிடவே, எனது பெற்றோருக்கு துரைசாமி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், துரைசாமி என்னையே திருமணம் செய்துகொள்கிறேன் என்று தெரிவித்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி என்னை கோவிலுக்கு அழைத்து சென்று திருமணமும் செய்தார். திருமணத்திற்கு பின்னர் கொள்ளேகால் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தோம்.
இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற துரைசாமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டறிந்து தன்னுடன் வாழ வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், தலைமறைவாக உள்ள துரைசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.