மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறுநாளே சம்பவம்.. பாஜக பிரமுகர் படுகொலை... பழிக்குப்பழியா?.. மாவட்டத்தில் 144 அமல்..!
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில், இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் கே.எஸ் ஷான் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த போது, கார் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே பைசி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஷானை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி மோர்ச்சா செயலர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், ஆலப்புழாவில் உள்ள வீட்டில் இருக்கையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கே.எஸ் ஷான் உயிரிழந்த மறுநாளே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதால், பழிவாங்கும் எண்ணத்துடன் கொலைநடந்ததாக கருதப்படுகிறது.
இதனால் ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.