#BigBreaking: கேரளா மதவழிபாட்டு தலத்தில் குண்டுவெடித்த விவகாரம்; காரணம் என்ன?.. குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூல வீடியோ வெளியானது.. விபரம் உள்ளே.!
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், களமச்சேரி பகுதியில் நடந்த கிறிஸ்துவ ஜெபக்கூட்டத்தில் இன்று டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலியாகினர். 35-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, மாநில காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாடு-கேரளா எல்லைகள் உஷார்படுத்தப்பட்டன. டெல்லி, சென்னை, மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், களமச்சேரியை சேர்ந்த மார்ட்டின் என்பவர், தான் வெடிகுண்டு வைத்ததாக காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனியடையே, அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தான் எதற்காக வெடிகுண்டு வைத்தேன் என பேசியுள்ள மார்ட்டின், இறுதியாக காவல் நிலையத்தில் தான் சரணடைய செல்வதையும் கூறுகிறார்.
அந்த வீடியோவில் மார்ட்டின் பேசுகையில், "எனது பெயர் டொமினிக் மார்ட்டின். நான் நிகழ்வு நடந்த கிறிஸ்துவ சபையின் உறுப்பினர். டிபன் பாக்சில் வெடிகுண்டுகளை வைத்து நான் வெடிக்கச்செய்தேன்.
கடந்த 16 ஆண்டுகளாக ஜெவோஹா (Jevoha - பைபிளின் சில மொழிபெயர்ப்புகளில் கடவுளின் எபிரேய பெயரின் ஒரு வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது) சாட்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததேன், அவர்கள் செய்த பிரசங்கத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் நம் தேசத்திற்கு எதிரான விஷயங்களைக் கற்பித்தார்கள். பலமுறை அவர்களை எச்சரித்தேன். இறுதியாக நான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டிய நிலை வந்துவிட்டது.
கடந்த 6 மாதமாக நான் குண்டு தயாரிப்பதை பற்றி கூகுளில் தேடி கண்டறிந்துகொண்டேன். நான் ஜெவோஹா அமைப்பு தவறாக பயணிப்பதை நான் உணர்ந்தேன். அவர்களை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை" என கூறியுள்ளார். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
A man identified as #DominicMartin hailing from #Cochin claims the responsibility of the #KalamasseryBlasts.
— Hate Detector 🔍 (@HateDetectors) October 29, 2023
He says he was associated with Jevoha Witnesses with last 16 years and he was not happy with the preaching done by them, they taught things which is against our nation… pic.twitter.com/KnfuPn42SL