மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்னை மறந்த காதலியை வீடுபுகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற காதலன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம், பானூர் பகுதியை சேர்ந்த பெண்மணி விஷ்ணு பிரியா. இவரின் முன்னாள் காதலர் ஷியாம் ஜித். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், பின் கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணு பிரியா ஷியாமுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
கழுத்து, கைகள் வெட்டிபடுகொலை:
இந்நிலையில், கடந்த 2022 அக்டோபர் மாதம் 22ம் தேதி ஷியாம்ஜித் பயங்கர ஆயுதங்களுடன் வருகைதந்து, முன்னாள் காதலி விஷ்ணு பிரியாவை படுக்கையறையில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். பெண்ணின் கழுத்து, கைகள் வெட்டி படுகொலை நடந்தது.
இதையும் படிங்க: உடைமாற்றும் அறையில் ஸ்பை கேமிரா; சிறுமிகளை படமெடுத்து மிரட்டிய பகீர் சம்பவம்.!
சைக்கோ படம் பார்த்து கொடூரம்:
பெண்ணின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் நடந்த படுகொலை சம்பவம் அன்று கண்ணூர் மாவட்டத்தையே உலுக்கியது. மேலும், ஷியாம்ஜித் கைது செய்து விசாரணை நடந்ததைத்தொடர்ந்து, அவர் சைக்கோ கொலையாளி படத்தை பார்த்து தன்னைவிட்டு பிரிந்த காதலியை கொலை செய்ததும் உறுதியானது.
தண்டனை மே 13ல் அறிவிப்பு:
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலசேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஷியாம்ஜித்தை கொலையாளி என உறுதி செய்தனர். மேலும், குற்றவாளிக்கு மே மாதம் 13ம் தண்டனை தொடர்பான அறிவிப்பை கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஒளிப்பதிவாளர் யானை தாக்கி பலி.!