கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கணவர், 6 வயது மகன் கண்முன்னே துள்ளத்துடிக்க உயிரிழந்த பெண்மணி; லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சோகம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, செங்கமாநாடு பகுதியை சேர்ந்த பெண்மணி சுஜி (வயது 38). இவர் நேற்று தனது கணவர் மற்றும் 6 வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.
அச்சமயம் இவர்கள் பயணித்த சாலையில், கார் ஒன்று சாலையோரம் நின்றது. காரை கடந்து சுஜியின் கணவர் வாகனத்தை இயக்கியபோது, பின்னால் லாரி ஒன்றும் வந்தது.
அப்போது திடீரென வாகனம் நிலைதடுமாறிய காரணத்தால், வாகனத்தில் இருந்தவர்கள் கீழே விழுந்துவிட, இதில் பெண்ணின் தலையில் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கி நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த சுஜியின் கணவர் மற்றும் 6 வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.