#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை.. டாட்டூ கலைஞருக்கு காவல்துறை வலைவீச்சு.! பரபரப்பு தகவல்..!!
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் செயல்பட்டு வரும் டாட்டூ கடையில், பெண்கள் டாட்டூ வரைய சென்றுள்ளனர். அப்போது, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி டாட்டூ கலைஞர் சுஜீஸ் பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காமல் இருக்க, டாட்டூ கலைஞர் தயக்கம் இன்றி பெண்களிடம் டாட்டூ வரைவதாக கூறி சில்மிஷம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் டாட்டூ வரைய சென்ற மாடல் அழகி, இதுகுறித்த விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
இதனையடுத்து, இதனால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பெண்கள் தங்களுக்கும் நடந்த இன்னல் குறித்து தெரிவிக்கவே, விஷயம் காவல் துறையினர் கவனத்திற்கு சென்றுள்ளது. காவல் துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கவே, 4 பெண்கள் டாட்டூ கலைஞருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற கொச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டாட்டூ கலைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல் நிலையம் வரை சில்மிஷ சேட்டை தொடர்பான தகவல் சென்றதை புரிந்துகொண்ட கயவன் தலைமறைவாகவே, அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சுஜீஸ் தன்னிடம் டாட்டூ வரைய வந்த சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை என பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.