மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த விராட் கோலி! சுவாரஸ்யமான வீடியோக்கள்



kholi-casted-vote-in-queue

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது வாக்குரிமையை ஹரியான மாநிலத்தின் குர்கான் தொகுதியில் நிறைவேற்றினார். 

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் 6ஆம் கட்ட தேர்தல் இன்று 7 மாநிலங்களின் 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. 

virat kholi

இதில் ஹரியான மாநிலத்தின் குர்கான் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியை சேர்ந்தவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் இன்று காலையே தனது வாக்கினை பதிவு செய்ய அந்த பகுதியில் உள்ள பைன் கிரஸ்ட் பள்ளிக்கு அதிகாலையே சென்றார்.
 

அங்கு பள்ளியின் சார்பாக மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்ற கோலி நேராக சென்று வாக்களிக்காமல் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். 


நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு திரும்பிய விராட் கோலியை காண மக்கள் குவிந்துவிட்டனர். மீண்டும் போலீசார் கோலியை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். 

வாக்களித்த பின்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி, "நாட்டினை கட்டமைப்பதற்கு வாக்களிப்பது அனைவரின் கடமை மற்றும் பொறுப்பாகும். அனைவரும் வாக்களியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.