மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனின் பெற்றோரை கட்டிவைத்து தர்ம அடி; 12 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசோக் நகர் மாவட்டம், முங்கையொலி பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். சம்பவத்தன்று தம்பதியின் மகன் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.
சிறைபிடிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர்
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து தம்பதியின் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். அங்கு இளைஞரின் பெற்றோரை சிறைபிடித்து பெண்ணின் தரப்பினர், அவர்களை கரண்டு கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: உயர்ஜாதி கோவிலுக்குள் சென்ற தலித் இளைஞர் தூக்கிலிட்டு கொலை?; வைரல் வீடியோவின் உண்மை என்ன?.!
65 வயது மற்றும் 60 வயதுடைய தம்பதிகள் தங்களை விட்டுவிடுமாறு கதறியும் பலனில்லை. 12 பேர் கொண்ட குழு இவர்களை தாக்கி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரையும் விரைந்து வந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
பிசிஆர் வழக்குப்பதிந்து விசாரணை
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தம்பதியின் வீடும் சூறையாடப்பட்டு இருக்கிறது. காவல் துறையினர் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் சாகசம்; இளைஞரின் உயிரைப்பறித்த அலட்சியம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!