திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி கழிவறையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளி தற்கொலை முயற்சி.. காவலர் படுகாயம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், பத்லாபூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில், சிறுமி ஒருவர் பயின்று வந்தார். சம்பவத்தன்று சிறுமி கழிவறைக்கு சென்ற நிலையில், அங்கு துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த அக்ஷய் ஷிண்டே (வயது 23) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோதிலும், தொடக்கத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி மிகப்பெரிய அளவில் போரட்டம் நடந்தது. சுமார் 6 மணிநேரத்திற்கும் மேலாக இரயில் மறியல் நடைபெற்றது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 24 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்..!
குற்றவாளி கைது
போராட்டத்தின் தீவிரத்திற்கு பின்னர் இவ்விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடந்த விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். உடனடியாக வழக்கு விசாரணை தொடங்காததாக காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஷிண்டே, விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படும் நடவடிக்கையை இன்று எதிர்கொண்டார். அச்சமயம், அவர் காவலர்களின் துப்பாக்கியை பிடுங்கி தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லாத நிலையில், 3 முறை துப்பாக்கி சூட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் மற்றும் அக்சய் ஷிண்டே ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!