திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொழிற்சாலையில் பாய்லர் வெடித்துச்சிதறி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 45 பேர் படுகாயம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. விபத்தை அறிந்த தொழிலாளர்கள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறினார். இருப்பினும், பாய்லர் உள்ள பகுதியில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: 20 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி.!
4 பேர் பலி., 45 பேர் படுகாயம் என அறிவிப்பு
இதனால் 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், 45 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலரின் நிலைமை கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருப்பதால் உயிர்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விஷயம் குறித்து தகவல் அந்த அம்மாநில முதல்வர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
#Thane | Boiler Blast in a Chemical Company in #Dombivali
— Mumbai Tez News (@mumbaitez) May 23, 2024
6 Dead & Several injured in blast.#ThanePolice#boiler #blast #Maharashtra #Maharashtranews@KDMCOfficial @ThaneCityPolice @CMOMaharashtra pic.twitter.com/5A7Gp6s1PO
இதையும் படிங்க: திருமணத்திற்கு ஆடை வாங்கிவரும்போது சோகம்; கார் - லாரி மோதி 2 குழந்தைகள், மணமகன் உட்பட 5 பேர் பரிதாப பலி.!