திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணத்திற்கு ஆடை வாங்கிவரும்போது சோகம்; கார் - லாரி மோதி 2 குழந்தைகள், மணமகன் உட்பட 5 பேர் பரிதாப பலி.!
ஆந்திரதேசம் மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம், ராணி நகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் - லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையில் தறிகெட்டு இயங்கி தடுப்புசுவற்றின் மீது மோதியது.
அப்பளமாக நொறுங்கிய கார்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், அவ்வழியே வந்த லாரி மீது மோதி கார் அப்பளமாக நொறுங்கியதில், காரில் பயணம் செய்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!
திருமணத்திற்கு ஆடைவாங்கி வரும்போது சோகம்
உயிரிழந்தவர்கள் அல்லி சாஹிப் (58), ரெஹானா பேகம் (40), ஷேக் பாஷா (28), முகம்மத் (6), அமன் (4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஷேக் ஷேக் பாஷாவுக்கு வரும் 27ம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக திருமணத்திற்கு ஹைதராபாத் சென்று ஆடை வாங்கிய குடும்பத்தினர், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் திருமண வீட்டாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்; 35 பேரின் நிலை என்ன?.. சூறாவளி காற்றால் பகீர்.!