குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காதலிக்கு அடுத்த வாரம் கல்யாணம்..! காதலியை பழிவாங்க வேறலெவலில் யோசித்த காதலன்..! பகீர் சம்பவம்.!
தனது முன்னாள் காதலியை பழிவாங்க காதலன் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியைச் சேர்ந்தவர் சரோஜ் குமார். 28 வயதாகும் சரோஜ் குமாரும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரித்துவிட, அந்த பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை அறிந்த சரோஜ் குமார், தனது காதலியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
தாங்கள் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்து, கோலி பண்டிகை வருவதை ஒட்டி, கோலி பண்டிகைக்கு வாழ்த்து கூறுவது போல அந்த பெண் வசிக்கும் பகுதி முழுவதும் போஸ்டர்களாக அடித்து ஒட்டியுள்ளார் சரோஜ்குமார். இந்த விஷயம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த சரோஜ் குமாரை போலீசார் கைது செய்து, அவர் ஒட்டிய போஸ்டர்களையும் நீக்கியுள்னர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.