மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணீர் சோகம்.. தேசப்பற்றுடன் செயல்பட்டவரின் சிறு அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலி.. பகீர் வீடியோ வைரல்.!
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. நாளைய தினம் இந்திய சுதந்திர தின விழாவின் வெற்றிகொண்டாட்டம் 75 ஆவது ஆண்டினை அடியெடுத்து வருகிறது. இந்நன்னாளில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மத்திய அரசு ஒவ்வொருவரின் வீட்டிலும் மூவர்ண கொடியை ஏற்ற அழைப்பு விடுத்தது.
இதன்பேரில், இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு முன்புறம் மற்றும் வீட்டு மாடிகளில் மூவர்ண கொடியை ஏற்றி வருகின்றனர். சாதி, மத, சமய, வேலை என்ற பல வேற்றுமையில் ஒற்றுமையாக ஒவ்வொருவரும் தேசிய கொடிக்கு தங்களின் மரியாதையை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வீட்டின் மாடியில் மின்சார கம்பிகளுக்கு மிக அருகே மூவர்ணக்கொடியை ஏற்ற முயற்சித்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த கலங்கவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், பீட் மாவட்டத்தில் வசித்து வரும் ஷேய்க் முக்தர் என்பவர் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அம்பலமானது.