#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி விபச்சார வழக்கில் கைது.!! கணவரின் ஆத்திரத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.!!
புதுச்சேரி மாவட்டத்தில் மனைவி விபச்சார வழக்கில் கைதான ஆத்திரத்தில் கணவன், 2 குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனந்தவேலு கௌசல்யா தம்பதி
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரான ஆனந்த வேலு என்பவருக்கு கௌசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஜோவிதா மற்றும் 1 1/2 வயதில் சஸ்மிதா என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். ஆனந்த வேலு மற்றும் குடும்பத்தினர் புதுவை மாநிலம் காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
விபச்சார வழக்கில் கைது
ஆனந்த வேலு மற்றும் மனைவியிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யா விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி காவல்துறை கைது செய்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ஆனந்த வேலு.
இதையும் படிங்க: பயங்கர சம்பவம்... மது போதையில் தகராறு.!! கணவனை போட்டுத் தள்ளிய மனைவி, மைத்துனர் கைது.!!
குழந்தைகள் கடலில் வீசி கொலை
மனைவியின் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதால் கடும் விரக்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த ஆனந்த வேலு தனது குழந்தைகளான ஜோவிதா மற்றும் சஸ்மிதா ஆகியோரை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கூனி மேடு பகுதியில் உள்ள கடலில் வீசிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார். இந்நிலையில் கடற் பகுதியில் ஒதுங்கிய குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆனந்த வேலு காவல்துறையில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி... கள்ளக்காதலியுடன் உல்லாசம்.!! நேரில் பார்த்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.!!