குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடேய்..! நடுவானில் இது என்னடா கூத்து..!! பயணியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த சக பயணிகள்.. பரபரப்பு சம்பவம்..
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணி ஒருவர் திடீரெனெ எழுந்து விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றுள்ளார்.
இதனால் சக பயணிகள் பயத்தில் அலறிய நிலையில் விமான பணியாளர்களும் சக பயணிகளும் இணைந்து அந்த பயணியைப் பிடித்துள்ளனர். பின்னர் விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும் அந்த நபரை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
திடீரெனெ பயணி ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவசர கால கதவை அவர் திறக்க முற்பட்டது எதனால் என போலீசாரிடம் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.