நிவாரண முகாமிலேயே திருமணம் நடந்த சம்பவம்!. மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர்!.



marriage happened in kerala Relief camp


கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு மாநிலமே தத்தளித்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

kerala flood

அதுமட்டுமின்றி அங்கு பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்தும்,நிலச்சரிவினாலும் நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்து இதுவரை 360 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர்.

இதையடுத்து லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் நிவாரண முகாமில் தங்கியிருந்தார்.

kerala flood

அவருக்கு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னதாகவே ஷாய்ஜூ என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திடீர் மழை வெள்ளத்தால் அஞ்சுவின் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திரிபுராந்தகா கோயில் அறக்கட்டளை இவரது திருமணத்தை நடத்த முன்வந்தது. இதையடுத்து அஞ்சு தங்கியிருந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த முடியாமல் போய்விடுமோ என்று வேதனையில் இருந்த அஞ்சு குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.