96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புல்வாமா தாக்குதலில், உயிர் தியாகம் செய்த கணவர்! கணவன் வழியை பின்பற்ற நினைக்கும் மனைவி! நெகிழ்ச்சி சம்பவம்!
கடந்த வருடம் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முகாஷ்மீருக்கு 2000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது புல்வாமா என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் துணை இராணுவ படையினர் 40பேர் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியாலின் மனைவி 28 வயதாகும், நிதிகா கவுல் இந்திய இராணுவத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். அந்த முடிவுகள் வெளியானதும் அவர் இராணுவ வீரராக இந்தியாவிற்கு சேவை செய்வார்.
இதுகுறித்து நிகிதா கூறுகையில், "எனது கணவர் விபூ பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். காதல் வாழ்க்கை, தைரியம், புத்திசாலித்தனம், பிறருக்கு உதவுதல் என பல வகைகளில் அவர் சிறப்பாகத் திகழ்தார். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இந்த முடிவை எடுத்தேன். அவரது தைரியம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் வாழும் வரை நிலைத்திருக்க செய்வேன்” என்று கூறினார்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியாலுக்கு நிகிதாவுடன் திருமணம் நடைபெற்று வெறும் 10 மாதங்கள் மட்டும் ஆனநிலையில் புல்வாமா தாக்குதலில் விபூதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.