96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம்! ராகுல்காந்தி மவுனம் காப்பது ஏன்? கொந்தளிக்கும் மேனகாகாந்தி!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ அன்னாசி பழத்திற்குள் வெடியை வைத்து உணவாக தந்துள்ளனர். அதனை உண்பதற்கு யானை, பழத்தை கடிக்கும் போது பழத்திற்குள் இருந்த வெடி வெடித்ததில், அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களில் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தத நிலையில் வலியால் துடித்துள்ளது.
ஆனாலும் அந்த யானை வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. வெடி வெடித்ததில், வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து தண்ணீருக்குள் இறங்கி உயிரை விட்டது.
இந்த விவகாரம் குறித்து பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியும் விலங்குகள் நல உரிமை அமைப்பினைச் சேர்ந்தவருமான மேனகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்ப்பிணியானை கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று கேரள வனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய் வேண்டும். வன அலுவலர்கள் அனைவரும் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த அந்த தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். மவுனம் காத்து வருகிறார். மத்திய அரசை குறை கூறுவதில் கவனம் செலுத்தும் அவர் (ராகுல் ) தனது சொந்த தொகுதியில் நடந்துள்ள பிரச்சினையை எப்படி தீர்ப்பார் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.