காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இனி வீட்டு உபயோக சிலிண்டர் வெறும் ₹.450 தான்.. மானியத்தை வாரி வழங்கும் ம.பி அரசு.!
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மத்திய பிரதேச அரசின் முதலமைச்சர் லட்லி பஹூனா யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளில் உபயோகிக்கப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலை மானியத்தின் அடிப்படையில் ₹.450 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிலிண்டருக்கான மீதி செலவுகளை மாநில அரசு ஏற்கும் என்றும் நம் மாநில அரசு தெரிவித்து இருக்கிறது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மத்திய பிரதேச அரசின் முதலமைச்சர் லட்லி பஹூனா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் பெயர்களில் எரிவாயு இணைப்புகளை பதிவு செய்திருக்கும் அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட சிலிண்டரின் விலைக்கு மக்கள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து சிலிண்டர்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், மாநில மத்திய அரசுகளின் மானியமானது அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஆகவே, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கு வருகிறது. அந்த வகையில், இல்லதரிசிகளின் வாக்குகளை பெறும் வண்ணம் மத்திய பிரதேச அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.