மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிதிச்சுமையால் சோகம்; கடலில் விழுந்து எஞ்சினியர் தற்கொலை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - நவி மும்பையை இணைக்கும் வகையில், அரபிக்கடலில் உள்ள இரண்டு பகுதிகளை இணைத்து பிரம்மாண்டமான அடல் சேது பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீராத சர்க்கரை நோயுடன் கால்களில் புண்கள்; மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கிய நோயாளி.!
மும்பை வசித்து வரும் தொழிலதிபர் மற்றும் பொறியாளர் சீனிவாசன் (வயது 38). இவர் கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
கடலில் விழுந்து தற்கொலை
இந்நிலையில், உச்சகட்ட மனவிரக்திக்கு சென்ற சீனிவாசன், அடல் சேது வழியாக தனது வாகனத்தை இயக்கிச்சென்று, பின் பாலத்தின் நடுவில் ஓரமாக நிறுத்தி இருக்கிறார்.
வாகனத்தில் இருந்து இறங்கி பாலத்தில் ஏறியவர், திடீரென கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளிக்குச்சென்று படிக்க வற்புறுத்தியதால் துயரம்; தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த 15 வயது சிறுவன்.!