குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"அங்கங்க குண்டு வெடிக்கும்" - போனில் வந்த மர்ம அழைப்பு.. ஆசாமி அதிர்ச்சி செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று மாலை 6 மணியளவில் போன் ஒன்று வந்துள்ளது.
போனில் பேசிய மர்ம நபர், மும்பையில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் மாநகர அளவிலான அதிகாரிகள் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு, பல இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் எவ்வித வெடிபொருட்களுக்கான அடையாளமும் தென்படவில்லை. இதனால் போனில் வந்த அழைப்பு போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.