கரையை கடந்த நிசர்கா புயல்! சுழற்றி அடித்த சூறாவளி! சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்! அதிர்ச்சி வீடியோ!



nisarga-strome-passed

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது.

இந்தநிலையில், அந்த புயலானது இன்று தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்தது.

நிசர்கா புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.  இந்தநிலையில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிசர்கா புயலால் மின் கம்பங்கள்,  மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிசர்கா புயல் மும்பைக்கு அருகே கரையை கடந்ததால், மும்பை விமான நிலையம் மூடப்பட்டு இரவு 7 மணி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டன. மேலும் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.