குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இதை செய்தால் போதும்! கொரோனா ஓடியே விடும்! சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கொடுத்த புதிய டிப்ஸ்!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாலியல் வழக்கு மற்றும் ஆள் கடத்தல் வழக்குகளில் தீவிரமாக தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவரும் பஞ்சபட்டினி விரதத்தை 28 நாட்கள் மேற்கொண்டாலே கொரோனா வைரஸை இந்த உலகத்தை விட்டே விரட்டிவிடலாம். எங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எதிர்காலத்திலும் அந்த பாதிப்பு வராது. மேலும் பரமசிவன், காலபைரவர் இருக்கும் வரை எங்களுக்கு எதுவும் ஆகாது. அவர்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.