குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
நான் இறந்தபிறகு உடலை என்ன செய்யவேண்டும்! 10,000 கோடி சொத்துக்கள் யாருக்கு? நித்யானந்தா எழுதிய உருக்கமான உயில்!
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படம் நபர்களில் ஒருவர் தான் நித்யானந்தா. கடத்தல் மற்றும் கற்பழிப்பு என பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சுவாமி நித்யானந்தா.இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ள நிலையில் அவர் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். அதனை தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் நித்யானந்தா நேபாளம் வழியாக வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், கைலாஷ் என்ற தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் அனைவரும் கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் எனவும் நித்யானந்தா அறிவித்திருந்தார்.
மேலும் பல இடங்களில் போலீசார் தீவிரமாக அவரை தேடி வந்தாலும் அதனை பொறுத்தப்படுத்தாமல் நாள்தோறும் வீடியோக்களை வெளியிட்டு அவர் மாஸ் காட்டி வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளிட்ட வீடியோவில் தாம் யாருக்கும் எதிரானவன் அல்ல, ஸ்ரீகைலாசா நாட்டின் மூலம் சமூகத்துக்கு ஆன்மிக பணியை செய்து வருகிறேன்.
நான் மரணம் அடைந்த பிறகு மதுரை ஆதீனத்தில் எந்த முறையில் உடலை அடக்கம் செய்வோர்களோ அதேபோன்று என்னை பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் 10000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டநிலையில், தனது சொத்துக்கள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய 3 குருபரம்பரை ஆதீனத்துக்கு சேரும் வகையில் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.