குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பச்சைபிள்ளைக்கு பால் கூட இல்லை, கேரளாவில் வெள்ளத்தில் தவிக்கும் குடும்பத்தார் வெளியிட்ட கண்ணீர் சிந்த வைக்கும் வீடியோ .!
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு ,தண்ணீர் ,குழந்தைக்கு பால் கூட இல்லாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவில் உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆழ்வார் நகர் அருகே உள்ள கடுங்களூர் என்னும் பகுதி வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் உணவு தண்ணீர் கைக் குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருவதாகவும், தங்களை விரைவில் மீட்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் .
#KeralaFloods #KeralaFloodRelief
— Rhema Ashok (@Rhemaoffl) 17 August 2018
Help This family & Share Maximum 🙏🙏 pic.twitter.com/RAoGZWtOeQ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.