கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
உறவினர்களிடம் மனைவியின் இறுதிச்சடங்கிற்கு உதவுமாறு கேட்ட கணவர்! கடைசியில் நிகழ்ந்த சோகம்.
ஒடிசா மாநிலம் உர்மலா கிராமத்தை சேர்ந்தவர் கீலா சோரேன் - ரைமதா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான ரைமதாவிற்கு நேற்று முன் தினம் பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து கீலா அவர் மனைவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு கீலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தின் போது மருத்துவர்களால் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்த நிலையில் ரைமதா உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து கீலா தனது மனைவியின் சடலத்தை பெற்று கொண்டு தனது உறவினர்களிடம் சென்று இறுதிச்சடங்கிற்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர். காரணம் சில தினங்களுக்கு முன்பு கீலா ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அதன் காரணமாக கீலாவிடம் ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். அதனால் இறுதிச்சடங்கிலும் உதவி செய்ய மறுத்துள்ளனர். இதனால் கீலா தனி ஆளாக தனது மனைவியை எடுத்து சென்று சுடுகாட்டில் புதைக்க சென்றுள்ளார்.
ஆனால் ஊர்மக்கள் கீலாவின் மனைவியை அங்கு புதைக்க அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த கீலா தனது மனைவியை ஒரு தள்ளு வண்டியில் வைத்து காட்டு பகுதிக்கு சென்று தனியாளாக அவரை புதைத்துள்ளார்.
அதன் பிறகு மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தை தூக்கி சென்ற சோகம் சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.