ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மச்சான் இந்த பிட்டு..! 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிட்டு கொடுத்து உதவிய நண்பர்கள்.! வைரல் வீடியோ..!
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிட்டு கொடுத்து உதவியுள்ள சம்பவம் விடியோவாக வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், யவத்மல் நகரில் மகாகவ் மாவட்ட கவுன்சில் பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், தேர்வு எழுதும் தங்கள் பிள்ளைகளுக்கு பிட் கொடுத்து உதவி செய்துள்ளனர். பள்ளி சுற்று சுவரில் ஏறி, ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி போட்டு அவர்கள் உதவி செய்துள்ளனர்.
இந்த காட்சி அங்கிருந்த யாரோ ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH Maharashtra: People seen climbing the boundary walls and providing chits to students, writing their class X Matriculation examination at Zila Parishad School, Mahagaon in Yavatmal district. (03.03.2020) pic.twitter.com/IqwC4tdhLQ
— ANI (@ANI) March 3, 2020