96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
போதையில் மனைவியிடம் பொறுக்கித்தனம்: வீடியோவில் ஃபயர் விட்ட கணவனை அலேக்காக தூக்கி உள்ளே வைத்த போலீசார்..!!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மலையின் கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலீப். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி வேலைமுடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அதனை அவரே தனது செல்போனில் படமெடுத்து அந்த வீடியோவில், "மனைவியை நான் தான் தாக்கினேன். அவள் முகத்தில் ரத்தம் வழிவதற்கும் நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்ல மாட்டாள்" என்று கூறி சரமாரியாக அடித்து உதைக்கிறார்.
இந்த காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சமூகவலைதளத்தில் பரவவே, திலீப்பை கண்டித்த பலரும் இது குறித்து போலீஸார் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீசில் புகாரளிக்கவே, குடிபோதையில் தனது கணவர் அடித்ததாகவும், குடும்ப செலவுக்கு பணம் தராத காரணத்தால் சித்திரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திலீப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.