எமதர்மராஜா வேடமணிந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல் அதிகாரி.! என்ன கரணம் தெரியுமா.?



police get up Yamraj for vaccine

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேற்று மாலை 6 மணி வரை நாடுமுழுவதும் 68 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் காவல் அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்ற செய்தியை பரப்பவே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.