குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஒன்று, இரண்டு அல்ல மொத்தம் 17 பேர்...அறையில் இருந்த கண்ணாடியை உடைத்த பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கடந்த 2005 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு தடை விதிப்பதாக அதிரடி நடவடிக்கையை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதனையடுத்து சுப்ரீம் கோர்ட் விடுத்த உத்தரவை அடுத்து மீண்டும் டான்ஸ் பார்களை நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.
இருப்பினும் சில கட்டுபாடுகளை அரசு விதித்திருந்தது. ஆனால் அவ்விதிகளை பின்பற்றாமல் ஒரு சில பார்கள் செயல்பட்டு வருகின்றனர். அதில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற மதுபான விடுதியில் கட்டுப்பாடுகளை மீறி அழகிகள் நடனம் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.
அதனையடுத்து போலீசார் கடந்த சனிக்கிழமை மதுபான விடுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சென்று சோதனை நடத்தியுள்ளார். அப்போது ஒரு அறையில் மட்டும் சந்தேகப்படும் வகையில் ஒரு பெரிய கண்ணாடி இருப்பதை பார்த்துள்ளனர்.
உடனே அக்கண்ணாடியை உடைத்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் அக்கண்ணாடிக்கு பின்புறம் ஒரு கதவு இருந்துள்ளது. அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறை இருப்பதையும் அந்த பாதாள அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
பின் போலிசார் அந்த அறையிலிருந்த 17 நடன அழகிகளை வெளியேறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர் மற்றும் 3 ஊழியர்களை கைது செய்தனர். மேலும் பாருக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.