ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உறங்கியவர்களிடம் தகராறு செய்து, அடித்துக்கொலை - சிமெண்ட் கல் சைக்கோ அதிர்ச்சி செயல்.! 2 பேர் துடிதுடிக்க மரணம்.!!
சாலையோரம் உறங்கிக்கொண்டு இருந்தவர்களிடம் தகராறு செய்து, சிமெண்ட் கல்லால் 2 பேரை அடித்து கொலை செய்த சைக்கோ கைது செய்யப்பட்டுள்ளான்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிரும்பாம்பாக்கம், கன்னிக்கோவில் பகுதியில் தனியார் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே சிமெண்ட் கடை மற்றும் தேநீர் கடை உள்ள நிலையில், அங்கு இரவு வேளைகளில் பழைய பேப்பரை சேகரித்து விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சரக்கடித்து சிலர் உறங்குவது வழக்கமானதாகும்.
இந்நிலையில், நேற்று இரவில் கடைகள் முன்பு 2 பேர் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவில் 2 மணியின்போது சைக்கோ நபர் வருகை தந்துள்ளார். உறங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி மதுபானம் குடிக்க பணம் கேட்ட நிலையில், அவர் தன்னிடம் ரூ.50 மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சைக்கோ சிமெண்ட் கல்லை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொருவர் கேள்வி எழுப்புகையில் அவரையும் கல்லால் தாக்கியுள்ளார். இதனைக்கண்ட வாகன ஓட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள குட்டியாங்குப்பம் மணிகண்டன் (வயது 45) என்பதும், மனநோயாளியாக சுற்றிவரும் அவர் 3 பேரை கொலை செய்ததும் அம்பலமானது. இந்த விசாரணையின் போதே கிரும்பாம்பாக்கம் சுடுகாட்டில் இரத்த காயத்துடன் பிணம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அவரையும் சைக்கோ கொலை செய்தது அம்பலமானது.