96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிறப்பு சான்றிதழ் வாங்க செலவு ரூ.6, 10 நிமிடம் தான்.. அசத்தும் அரசு அதிகாரிகள்.!
கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர் சக்திவேல் சண்முகம். இவர் சமீபத்தில் தனது மகனின் பிறப்பு சான்றிதழ் வாங்க பாண்டிச்சேரிக்கு சென்ற நிலையில், அதுகுறித்த தருணத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "எனது மகன் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு பாண்டிச்சேரியில் உள்ள முதலியார்பேட்டை பிறப்பு பதிவாளர் அலுவலகம் சென்றிருந்தேன். அது மிகச்சிறந்த அனுபவம்.
ரூ.1 கொடுத்து விண்ணப்பம் வாங்கி, ரூ.5 நகலுக்கு செலவு என மொத்தம் ரூ.6 தான் ஆனது. இதனைவிட பெரும் சிறப்பாக, அரசு அலுவலகத்தில் எனக்கு மொத்த செயலையும் செய்ய 10 நிமிடம் கூட ஆகவில்லை. என்னுடன் பலரும் சான்றிதழ் வாங்கி சென்றனர்.
மக்கள் அடுத்தடுத்து வந்துகொண்டு இருந்தாலும், கூட்டம் என்பது இல்லை. பணியில் இருந்த அதிகாரிகளும் முகம் சுளிக்காமல், இலஞ்சம் எதிர்பார்க்காமல் பணியாற்றி வந்தனர். இது பாராட்ட வேண்டிய செயல்.
இதனைப்போன்று கடலூர் மாநகராட்சியும் செயல்பட வேண்டும் என்பதே எனது ஆசை. எனது ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவலகமும் அதனைப்போல செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இவரின் முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.