"பிரசாந்த் கிஷோர் எனும் நான்" - 2026 பீகார் தேர்தலில் இலக்கு நிர்ணயித்த பிரசாந்த் கிஷோர்.. அதிரடி அறிவிப்பு.!



Prashant Kishor Plan to Make Party and Conduct 2026 Bihar State Election 

 

இந்தியாவில் நடைபெறும் மாநில மற்றும் மக்களவை தேர்தலில், அரசியல்கட்சியின் திட்டமிடலுக்கு ஐ-பேக் என்ற நிறுவனத்தை தொடங்கி செயல்பட்டு வந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பாஜக, ஆம் ஆத்மீ, திமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உட்பட பலவேறு கட்சிகளின் வளர்ச்சிக்காக உழைத்து வந்தார். 

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியாக தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டு இருந்தார். இதற்குப்பின் அரசியல் வியூக பணிகளில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட அவர், பீகாரில் 'ஜன சுராஜ்' என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி பாதை யாத்திரை பயணம் மேற்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: பாம்பு கடித்த அடுத்த நொடியே உயிர் பிழைக்க வாலிபர் செய்த காரியம்.! உயிரிழந்த பாம்பு.! ஷாக்கான மருத்துவர்கள்!!

ஜன சுராஜ் கட்சி உதயமாகிறது

இதனிடையே, ஜன சுராஜ் அமைப்பானது காந்தி ஜெயந்தி நாளில் அரசியல் கட்சியாக மாறுகிறது. இதன் வாயிலாக பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார். அவர் நடத்தும் கட்சிக்கான நிர்வாகிகள், பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே ஜன சுராஜ் அமைப்பில் பீகாரின் முன்னாள் அமைச்சர் மோனாஸிர் ஹசன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் முன்னாள் எம்.எல்.சி ராம்பாளி சிங், முன்னாள் ஐபிஎஸ் ஆனந்த் மிஸ்ரா, ஐக்கிய ஜனதா தளம் மங்கனி லால் உட்பட பலரும் இணைந்துகொண்டுள்ளனர். இதனால் பீகார் தேர்தலுக்கான வியூகத்தை பிரசாந்த் கிஷோர் வகுத்து இருக்கிறார். 

இதையும் படிங்க: பெண் மருத்துவர் இப்படி செய்யலாமா?.. திருமணத்திற்கு மறுத்த காதலனின் ஆணுறுப்பை துண்டித்த பயங்கரம்.!