96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பேக்கரி உரிமையாளரை வெளுத்தெடுத்து கடை சூறை.. ஓசி கேக் கேட்டு நடந்த பயங்கரம்.. பிச்சையெடுக்கலாம் பாஸ்..!
பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி, கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கொம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜீவன். இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த சக்திவேல் என்பவரின் ஆதரவாளர்கள் இவரது கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது பணம் தராமல் ஓசியில் கேக் மற்றும் பேக்கரி பொருட்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ராஜீவன் கோபமுற்று மறுப்பு தெரிவித்த நிலையில், ஆவேசமடைந்த அந்த கும்பல் ராஜீவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.இதனைதொடர்ந்து பேக்கரி கடையில் வைத்திருந்த, பேக்கரி பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அத்துடன் அந்த கும்பல் தாக்கியதில் ராஜீவன் காயமடைந்த நிலையில், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலமாக விசாரணை மேற்கொண்டு, கடையை அடித்து நொறுக்கிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.