குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பஞ்சாப் முதல்வருக்கு இரண்டாவது திருமணம் இன்று..! யாரை மணக்கிறார் தெரியுமா.?
நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் பகவந்த் மான். 48 வயதுநிரம்பிய இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன் என 2 குழந்தைகள் பிறந்த நிலையில், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டனர்.
தற்போது இந்தர்பிரீத் கவுர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார். இந்த நிலையில் பகவந்த் மானுக்கு 2-வது திருமணத்துக்கு அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். குர்பிரீத் கவுர் என்ற மருத்துவரை சண்டிகாரில் இன்று பகவந்த் மான் திருமணம் செய்கிறார்.
இந்த நிலையில், முதல் திருமணம் முறிந்த ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவரது தாயார் ஹர்பால் கவுரின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு பகவந்த் மான் திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலும் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.