திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 பேர் கும்பலால் ஜிம்மில் 17 வயது சிறுமி பலாத்காரம்; பெற்றோரின் மானப்பிரச்சனையால் விஷம் குடித்து உயிரை மாய்த்த சோகம்.!
ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைக்கலாம் என கருதிய சிறுமியை சீரழித்த கும்பல், அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ள துயரம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
17 வயது சிறுமி
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டம், ரத்தன்கர்க் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி, தான் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என தன்னுடன் பயிலும் நண்பர் ஒருவரிடம் கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர் சிறுமியை ஜிம்முக்கு அழைத்து சென்று சேர்த்து விடுவதாக கூறி இருக்கிறார். மே 11ம் தேதி சிறுமியை ஜிம்முக்கு அழைத்துச்சென்ற நிலையில், அங்கு அவரின் நண்பர்கள் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!
நம்பிச்சென்ற இடத்தில் துரோகம்
இதனால் பயந்துபோன சிறுமி தான் நாளை வருவதாக கூறி புறப்பட முற்பட்டாலும் பலன் இல்லை. சிறுமியை ஜிம்முக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கயவர்கள் ஐவராக சேர்ந்து அத்துமீறி இருக்கின்றனர். ஒருவர் பின் ஒருவர் என சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஜிம் உரிமையாளர் எதிர்பாராத விதமாக வந்தபோது சிறுமி மட்டும் அரைமயக்க நிலையில் இருந்துள்ளார்.
குடும்ப மானத்தை காரணம் காண்பித்த பெற்றோர்
அவரிடம் விசாரித்தபோது உண்மை தெரியவரவே, உடனடியாக அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். கடும் உடல்நலக்குறைவுடன் அவதிப்பட்ட சிறுமி உள்ளூர் கிளீனிக்கில் அனுமதிக்கப்பட்டு பின் மறுநாளே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறி கதற, அவர்கள் குடும்ப மானம் போய்விடும் என எதுவும் கூறாமல் இருந்துள்ளனர்.
மரணத்திற்கு பின் வெளிவந்த உண்மை
ஒருகட்டத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கவே, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுமியின் தந்தை மருத்துவர்களிடம் மகளுக்கு நடந்ததை கூறி கதறி இருக்கிறார். உண்மையை அறிந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
5 பேர் கைது, பதற்றம்
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ரோஹித், அஜய், மோஹஷின், ஜவேத், யூனிஸ் ஆகிய 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வகுப்புத்துவ பிரச்சனையையும் உண்டாக்கி இருப்பதால், பாதுகாப்பு கருதி காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 7 பேர் கும்பலால் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மயக்க மருந்து கொடுத்து கடத்தி நடந்த சோகம்.!