#VIDEO : 35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை.. 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு.!



rajasthan-girl-rescue-by-team-after-18-hours-try

தவறி விழுந்த சிறுமி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டவுசா மாவட்டத்தில் பாண்டுகீ பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை 35 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை திடீரென ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தீவிர போராட்டம்

இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, குழந்தை 15 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், குழந்தை விழுந்த இடத்தின் இடது பக்கத்தில் இருந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. 

இதையும் படிங்க: முதலையை நாய்குட்டி போல ஆக்டிவா ஸ்கூட்டரில் அசால்ட்டாக மீட்டுச் சென்ற அதிகாரிகள்; நெட்டிசன்கள் கலாய்.!

பத்திரமாக மீட்பு

குழாயின் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு கேமராவின் மூலம் குழந்தையின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு முதல் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இதையும் படிங்க: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 24 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்..!