மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரம்... பெற்றோர் கண் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி... 17 வயது இளைஞன் வெறி செயல்.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது குற்றவாளி ஜாமினில் வெளியே வந்து பாதிக்கப்பட்ட சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுமி கற்பழிப்பு வழக்கு
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியை 17 வயதான ரிங்கு என்ற நபரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ரிங்குவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சிறுவன் ரிங்குவிற்கு ஜாமீன் கிடைத்தது.
சுட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி
இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த ரிங்கு தான் கைது செய்யப்படுவதற்கு காரணமான சிறுமியை பழி வாங்க நினைத்தான். இதனையடுத்து தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு சிறுமியின் வீட்டிற்கு சென்ற ரிங்கு அவரது தாய், தந்தை மற்றும் சகோதரனின் கண் முன்னே சிறுமியை கொடூரமாக சுட்டு படுகொலை செய்தான். இதனைத் தொடர்ந்து ரிங்கு மற்றும் அவனது நண்பர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இதையும் படிங்க: திருமணமான 1,1/2 மாதத்தில் இத்தனை முறை தானா.? புதுமாப்பிள்ளையால் கடுப்பான மனைவி.!
காவல்துறை விசாரணை
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமியின் வீட்டிற்கு வந்து அவரது இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸ் தப்பி ஓடிய ரிங்கு மற்றும் அவனது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகிறது.
இதையும் படிங்க: சமோசா பிரியர்களுக்கு ஷாக்; தவளையுடன் பொறித்து வழங்கப்பட்டதால் அதிர்ச்சி.!