மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 1,1/2 மாதத்தில் இத்தனை முறை தானா.? புதுமாப்பிள்ளையால் கடுப்பான மனைவி.!
வரதட்சணை புகார்
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரின் அசாதாரண செயலால் கடுப்பாகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வரதட்சணை சித்திரவதை செய்வதாக கூறி கணவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த நிலையில், அவர் விவாகரத்து கேட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் துர்நாற்றம்
விவாகரத்துக்கு காரணம் உண்மையில் வரதட்சணை கொடுமை கிடையாது. அதைவிட ஒரு மோசமான விஷயம். இதுவரை திருமணமாகி அவர்களுக்கு 44 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கணவர் மீது கடும் துர்நாற்றம் அடித்துள்ளது.
இதையும் படிங்க: சமோசா பிரியர்களுக்கு ஷாக்; தவளையுடன் பொறித்து வழங்கப்பட்டதால் அதிர்ச்சி.!
புனித குளியல்
அவர் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கங்கை தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு தான் புனிதம் அடைந்து விட்டதாக கூறுவதாகவும், அன்றாடம் குளித்து கொண்டு சுத்தமாக இருங்கள் என்று கூறினால், அதை மறுத்து அந்த பெண்ணிடம் சண்டையிடுவதாகவும் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கவுன்சிலிங்கில் தம்பதி
திருமணமாகி 44 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 6 முறை மட்டுமே அவர் குளித்து இருப்பதாக கூறப்படுகிறது. கணவரின் இந்த மோசமான நடவடிக்கையால், அதிருப்தி அடைந்த மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு இருக்கிறார். இது குறித்த விசாரணையில் அவர்கள் இருவரையும் குடும்ப நல ஆலோசனை மையத்திற்கு செல்லுமாறு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!