96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ரீல்ஸ் மோகம்.. கணவர் கண்டித்தும் கேட்க மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவரின் வெறிச்செயல்.!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூர் பகுதியில் பரிமாள் பைத்யா - அபர்ணா தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் அபர்ணா இன்ஸ்டகர்மில் தினமும் ரீல்ஸ் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. இதில் அவரது கணவர் பரிமாள் பைத்யாவிற்கு விருப்பம் இல்லாததால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருந்துள்ளார். ஆனால் இதை சற்றும் பொருட்படுத்தாத அபர்ணா தொடர்ந்து ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.
இதனை தொடர்ந்து ரீலஸ் வெளியிடுவதன் மூலம் அபர்ணாவிற்கு சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது கணவர் அபர்ணாவை கண்டித்துள்ளார். மேலும் ரில்ஸ் போடுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் கணவரின் கண்டிப்பை அலட்சியப்படுத்தி அபர்ணா தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
பரிமாள் பைத்யா தனது மனைவி அபர்ணா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அபர்ணாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலு
ம் காவல் துறையினர் கொலை செய்த பரிமாள் பைத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரீல்ஸ் மோகத்தில் இருந்த மனைவியை கணவர் கழுத்து அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.