96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மீண்டும் மணிப்பூரில் வெடித்த கலவரம்... துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி...!!
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர்.
இதற்கு குதி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. அதில் 100-க்கும் அதிகமானோர் பலியாகினர். மேலும் ஏராளமான வீடுகளும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் 40 ஆயிரம் பேர் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு நாட்கள் அங்கு சென்று ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் 6 வழக்கு சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மணிப்பூரில் அமைதி நிலவாமல் தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாய் மற்றும் 9 வயது மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முதல் மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் பெண் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 10 முதல் 10:30 மணி வரை, இம்பால் கிழக்கு மற்றும் காங்போசி மாவட்டங்களுக்கு இடையே இருக்கும் காமன்லோக் பகுதியில் இரு கும்பல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. ஆயுதங்களாலும் மோதிக் கொண்டனர்.
இந்த துப்பாக்கி சண்டை மற்றும் வன்முறையில் பெண் உள்பட 9 பேர் பலியாயினர். பத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இம்பாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கொலை செய்யப்பட்டவர்களில் சிலரின் உடலில் தோட்டாக்கலால் ஏற்பட்ட காயம் மற்றும் வெட்டுக்காயங்கள் உள்ளது.
இதனால் கலவரம் நடந்த பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர், வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.